தஞ்சை பெருவுடையார் திருக்கோயிலின் ஆன்மிகம், பாரம்பரியம் மற்றும் இறைப்பணியுடன் ஒரு பயணம்
தஞ்சை பெருவுடையார் திருக்கோயிலின் ஆன்மிகம், பாரம்பரியம், வழிபாடு மற்றும் இறைப்பணியை மக்களிடம் கொண்டு சேர்ப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு ஆன்மிக முயற்சியாக எங்கள் பயணம் அமைகிறது.
பெருவுடையார் திருக்கோயிலுடன் தொடர்புடைய ஆன்மிக நிகழ்வுகள், வழிபாட்டு தகவல்கள், பாரம்பரிய செய்திகள், ஆன்மிக நூல்கள் மற்றும் இறைப்பணிகள் குறித்து பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் பயனுள்ள தகவல்களை ஒரே இடத்தில் வழங்குவதே எங்கள் நோக்கம்.
ஆன்மிக உணர்வையும் பாரம்பரியப் பண்பாட்டையும் அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்வதுடன், இறைப்பணி மற்றும் சமூக நல முயற்சிகளில் அனைவரையும் இணைப்பதே எங்கள் நோக்கம்.
விவசாயிகளுக்கு தேவையான வேளாண் அறிவு, புதிய விவசாய முறைகள், அதிக மகசூல் பெற ஏற்ற விதைகளைத் தேர்வு செய்வது, பருவகால நோய்கள் மற்றும் அவற்றிற்கான தீர்வுகள் குறித்து வழிகாட்டுதல்களை வழங்கும் சமூக நல முயற்சியாக உழவர் நல சங்கம் செயல்படுகிறது.
மேலும், விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை எடுத்துச் செல்ல வாகனங்களை வாடகைக்கு பெறவும், நெல், நிலக்கடலை உள்ளிட்ட பயிர்களுக்கான அறுவடை இயந்திரங்களை நியாயமான வாடகையில் பெறவும் உதவுகிறது.